'We hope that the Nilgiri constituency will take over the lotus' - Vanathi Srinivasan interview

Advertisment

'நீலகிரி தொகுதி தாமரை வசமாகும் என நம்புகிறோம்' என பாஜகவின் எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

நீலகிரியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், 'ஊழலுக்கு உறுதுணையாக இருக்கின்ற ஆட்சி;வாரிசு அரசியலை தூக்கி பிடிக்கின்ற ஆட்சிக்கு முடிவுரை எழுதுகின்ற விதத்தில் நீலகிரி பாராளுமன்ற தொகுதி தாமரையினுடைய வசமாகும் என நம்புகிறோம். இங்குதொகுதியினுடைய எம்பியாக இருப்பவர் ஆர்.ராசா. அவருடைய பேச்சு முழுவதும் எப்போதும் அடுத்தவர்களை அருவருக்கத்தக்கபேசும் வகையில் தான் இருக்கிறது.

ஆக்கபூர்வமாக நேர்மறை எண்ணத்தோடு அரசியல் இருக்கின்ற சூழலை அவர் மாற்றி அருவருக்கத்தக்க ஆபாசமான பேச்சுக்களால் மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார். ஒருபோதும் நீலகிரி பாராளுமன்ற தொகுதியின் மக்கள் அதை விரும்ப மாட்டார்கள். பிரதமர் மோடியின் அனைத்து நல்ல திட்டங்களையும் இந்த பகுதி மக்களுக்கு எடுத்துச் செல்வதற்காக பாஜக கட்சி உழைத்துக் கொண்டிருக்கிறது. இந்த மாவட்டத்தினுடைய தலைவர்களாக மோகன்ராஜ், சங்கீதா கடுமையாக தேர்தல் பணியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்'' என்றார்.