Advertisment

“அறத்தின் வழி நின்று அறிஞர்களைக் கெளரவிக்கிறோம்” - அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக்கழக விழாவில் கல்வியாளர்கள் புகழாரம்

Advertisment

அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாசென்னை, கோட்டூர்புரம் இணையக் கல்விக் கழக அரங்கில் நடந்தது. இதில், நடிகரும் கவிஞருமான ஜோ மல்லூரி, தமிழிசைப் பாடகர் டி.கே.எஸ்.கலைவாணன், தமிழறிஞர் கவிக்கோ ஞானச்செல்வன், மகாகவி பாரதியின் கொள்ளுப்பேத்தி உமா பாரதி, அண்மையில் சாகித்ய பால புரஷ்கார் விருது பெற்ற கவிஞர் மு.முருகேஷ், அஞ்சலி நாட்டியாலயா நிறுவனர் ரவிச்சந்திரன், திரைக்கலைஞர் கவிஞர் ரேகா, பாடலாசிரியர் அருண்பாரதி, கவிமாமணி வெற்றிப்பேரொளி, எழுத்தாளர் மு.ஞா.செ.இன்பா, கவிஞர் ஜலாலுதீன், கவிஞர் பேச்சியம்மாள், பாவலர் முத்துசாமி மற்றும் அமெரிக்க எழுத்தாளர் ஜெப்ரி அலெக்சாண்டர் ஆகியோருக்கு இப்பல்கலைக் கழகத்தின் வேந்தரான முனைவர் தாழை இரா.உதயநேசன் மதிப்புறுமுனைவர் பட்டத்தை வழங்கி சிறப்பித்தார்.

முன்னதாக அஞ்சலி நாட்டியாலயா குழுவினர் நாட்டியம் ஆடமறைந்த நாகூர் ஹனீபாவின் புதல்வர் நெளசாத்வாழ்த்துப்பாடல் பாடினார். விழாவில் தொடக்க உரையாற்றிய முனைவர் ஜெ.ஹாஜாகனி, “தமிழால் வியப்புறும் நிகழ்ச்சிகள் நடக்கும் என்பதற்குச் சான்றாக இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இன்றையச் சூழலில்உயர்வு நாடி அமெரிக்காவுக்குச் செல்பவர்கள் தங்களுடைய உயர்வையே முதன்மைப்படுத்துவார்கள். ஆனால் அவர்களில் இருந்து மாறுபட்டுநமது இதயநேசனான வேந்தர் ஐயா உதயநேசன் அவர்கள், தமது உயர்வை மட்டும் கருதாமல் தமிழின் உயர்வையும்தமிழ்ப்படைப்பாளர்களின் உயர்வையும் கருத்தில் கொண்டு செயல்படுகிறார்.இப்படிப்பட்ட மனிதர்களால் தான் இந்த உலகம் இயங்குகிறது. நம் தமிழ்கூறு நல்லுலகத்தின் எல்லை பற்றிச் சொல்லப்புகும் பனம்பாரனார். ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறு நல்லுலகம்’ என்கிறார். இது நம் நில எல்லையாக அன்று இருந்தது. இன்று தமிழ்கூறு நல்லுலகத்தின் எல்லைஅமெரிக்கா முதல் ஆம்பூர் வரைஐயா உதயநேசன் அவர்களால் நீண்டிருக்கிறது.

இவர் ஆம்பூரிலும் தொண்டு செய்கின்றார். அமெரிக்காவிலும் தொண்டு செய்கின்றார். தமிழுக்கும் தொண்டு செய்கின்றார். தமிழர்க்காகவும் தொண்டு செய்கின்றார். வழக்கமாக விருதுகள் வாங்கப்படுகின்றனவா? வழங்கப்படுகின்றனவா? என்றால், வாங்கப்படுகின்றன என்ற நிலை நிலவுகிறது. அந்த நிலை இங்கே மாறி இருக்கிறது. இலட்சாதிபதிகளுக்கு விருதுகள் தரப்படுகிற காலத்தில்லட்சியவாதிகளுக்குத் தரவேண்டும் என்று இங்கே தரப்பட்டிருக்கிறது. அதற்காகவே அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக்கழகத்தைப் பாராட்டுகிறேன்” என்றார் உற்சாகமாக.

Advertisment

மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றவர்களை வாழ்த்திய தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின்அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித் துறைத் தலைவர் முனைவர் இரா. குறிஞ்சிவேந்தன் தன் உரையில், “இங்கே மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற அத்தனை பேரும் சாதாரணமானவர்கள் இல்லை. அவரவர் துறையிலும் சிறந்து விளங்குகிறவர்கள். அப்படிப்பட்டவர்களை அழைத்துமதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கியதற்காக அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக்கழகத்தை முதலில் பாராட்டுகிறேன். எதன் அடிப்படையில் இங்கே பட்டம் கொடுக்கப்படுகிறது? எதற்காகக் கொடுக்கப்படுகிறது? என்று சிலர் கேள்வி எழுப்பலாம். இங்கே யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். எதற்கு வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம் என்ற நிலை இருக்கிறது. அதனால் கண்டவரும் கேள்வி எழுப்பலாம். அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை.

இங்கே நம் எல்லோரின் வாழ்த்துக்களோடும் தமிழ்ச்சான்றோர்கள் மதிப்புறு முனைவர் பட்டம் மூலம் கெளரவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

கடலில் நாம் கால் நனைக்க வேண்டும் என்றால் நாம்தான் அதைத் தேடிப்போக வேண்டும். ஆனால் மழை அப்படி இல்லை. அது நம்மைத் தேடிவந்து நனைக்கும். அதுபோல் அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக் கழகம்அறிஞர்களைத் தேடிவந்து கெளரவித்திருக்கிறது. பொதுவாக தமிழர்கள் அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று பட்டம் பெறுவதை கெளரவம் என்று கருதுகிறார்கள். ஆனால் நம் ஐயா உதயநேசன்அமெரிக்காவுக்குச் சென்றுஅங்கே படித்துப் பட்டம் பெற்றுஇந்த மண்ணுக்குத் திரும்பி வந்துசான்றோர் பெருமக்களுக்கு எல்லாம் பட்டமளித்து கெளரவப்படுத்துகிறார். இதைவிட சிறப்பு என்ன இருக்கிறது.

ஆங்கிலத்தை வணிக மொழி என்பார்கள். இலத்தீனை சட்டத்தின் மொழி என்பார்கள்.கிரேக்கத்தை இசையின் மொழி என்பார்கள்.ஜெர்மனை தத்துவத்தின் மொழி என்பார்கள்.பிரெஞ்சைத் தூதின் மொழி என்பார்கள்.இத்தாலியனைக் காதலின் மொழி என்பார்கள். அதுபோல் மொழிகளுக்கெல்லாம் தலைமை தாங்கும் நம் தாய்மொழியாம் தமிழ் மொழிஅன்பின் மொழியாகவும் அறத்தின் மொழியாகவும் திகழ்கிறது. அதனால்தான் இங்கே அறவுணர்வோடு முத்தமிழ்ப் பல்கலைக்கழகம் இவர்களுக்கெல்லாம் பட்டம் கொடுத்து மதிப்பளித்திருக்கிறது. நிதியைக் கருத்தில் கொள்ளாதுநீதியைக் கருத்தில் கொண்டு வழங்கப்பட்டிருக்கிற பட்டம் இது. இவர்களுக்கெல்லாம் முனைவர் பட்டம் கொடுக்கப்படவில்லை என்றால்அறம் செத்துப்போய்விடும். இது அறத்தின் வழி நின்று நடத்தப்படுகிற பட்டமளிப்பு விழா.” என்று பெருமிதமாகக் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழகத்தின் வேந்தரான முனைவர் தாழை இரா. உதயநேசன் தன் தலைமை உரையில், “தமிழ் அறிஞர்களைக் கொண்டாடுவது ஒன்றே நம் நோக்கம். அவர்களை உயர்த்த இயன்றதை எல்லாம்செய்வோம். உங்களுக்குத் தெரிந்துதகுதியானவர்கள் கண்டுகொள்ளப்படவில்லை என்றால் எங்களுக்குத் தகவல் கொடுங்கள். அவர்களை ஏந்திக்கொள்ள நாங்கள் இருக்கிறோம்.” என்றார் அழுத்தமாக.

விழாவின் தொகுப்புரையை முனைவர் ஆதிரா முல்லை மற்றும்முனைவர் கா.விஜயகுமாரி நிகழ்த்தபேராளர்கள் குறித்து பதிவாளர் பாட்டழகன் எடுத்துரைக்கமுனைவர் ஜோ.சம்பத்குமார் நன்றியுரை ஆற்றினார். சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர்ராஜாவும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரையும் வாழ்த்தினார். இந்த விழாவில் திரைப்படக் கலைஞர்கள், இயக்குநர்கள், கவிஞர்கள், படைப்பாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் கலந்துகொண்டுவிழாவைச் சிறப்பித்தனர்.

- இலக்கியன்

tamil
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe