Advertisment

”முதலமைச்சரை போல் நாமும் உழைக்க வேண்டும்..” - மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி

publive-image

“உழைப்பவர்கள் முதல் நிலைக்கு வர முடியும் என்பதற்கு நம் முதல்வரே உதாரணம். 50 ஆண்டு கால உழைப்பு. அவர் போல் நாமும் உழைக்க வேண்டும் என தோன்றும்” என கரூரில் நடந்த நிகழ்ச்சியில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

Advertisment

கரூர் மாவட்டப் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ‘கல்லூரிக் கனவு’ எனும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி வெண்ணைமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயர்த்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisment

publive-image

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “அரசுக் கல்லூரியில் பயிலும் மாணவிகளும் உயர் கல்வி பயில வேண்டும் என்பதற்காக நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாதம் 1000 ரூபாய் வழங்கி வருகிறார். நான் முதல்வன் திட்டத்தைதுவக்கி வைத்த முதலமைச்சர், தமிழகத்திற்கான முதல்வராக நான் இருக்கிறேன், நீங்கள் ஒவ்வொரு துறையிலும் முதல்வராக இருக்க வேண்டும் என்றார். அரசுப் பள்ளியில் படித்த பலரும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ளனர். அரசுப் பள்ளிகளை மிகச் சிறந்த பள்ளிகளாக முதலமைச்சர் உருவாக்கி வைத்துள்ளார்.

அனைவரும் சிறந்த முறையில் படித்து, பல்வேறு துறைகளில் சாதிக்க வேண்டும். உழைப்பவர்கள் முதல் நிலைக்கு வர முடியும் என்பதற்கு நம் முதல்வரே உதாரணம். 50 ஆண்டு கால உழைப்பு. அவர் போல் நாமும் உழைக்க வேண்டும் என தோன்றும். எந்த சூழலிலும் உயர் கல்விக்கு அழைத்துச் செல்ல உறுதுணையாக நாங்கள் இருப்போம். நான் அரசுப் பள்ளி, கல்லூரியில் படித்து தான் இந்த நிலைக்கு வந்துள்ளேன்” என்றார்.

school
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe