Skip to main content

கோவில் இருக்கு, இங்கு பள்ளிக்கட்டிடம் கட்டக்கூடாது!!! இந்து முன்னணியினர் கூறியதால் பரபரப்பு

Published on 02/09/2020 | Edited on 02/09/2020

 

we have temple  so will not allow to build school here

 

 

கோட்டூர் அருகே பள்ளிக்கல்வித்துறை சார்பில் தொடக்கப்பள்ளிக்கான புதிய  கட்டிடம்  கட்ட நிதி ஒதுக்கப்பட்டு  பணிகள் துவங்க இருந்த நிலையில் கோவில் உள்ள பகுதி எனக்கூறி பள்ளி கட்டாமல் வேறு இடத்தில் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள், இந்து முன்னணியினர் தடுத்ததால் பரபரப்பு 

 

திருவாரூர் மாவட்டம் கோட்டூர்விக்கிரபாண்டியம் அருகில் உள்ள காாியமங்கலம் கிராமத்தில் இயங்கி வந்த தொடக்க பள்ளி கடந்த  கஜா புயலின்போது காற்றில் சேதமடைந்து பயன்படுத்த முடியாதநிலைக்கு மாறியது. அதே இடத்தில் தமிழக அரசு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு கட்டிட பணிகள் இன்று துவங்கப்பட்டது. 

 

அங்குவந்த அப்பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி அமைப்பினர் இந்த இடத்தில் பள்ளிகட்டிடம் கட்டகூடாது நாங்கள் சொல்லும் வேறு இடத்தில் தான் கட்ட வேண்டும் என்று தடுத்தது நிறுத்தி முரண்டுபிடித்தனர். இதனால் அந்த பகுதியே பரபரப்பாகி போலீஸார் குவிக்கப்பட்டது. அங்கு இருந்த அதிகாரிகளோ, "அரசு நிதி ஒதுக்கியுள்ள இந்த இடத்தில்தான் புதிய கட்டிடம் கட்டுவோம்" என தெரிவித்தனர், இந்து முன்னணியினரோ, "இங்கு கட்டிடம் கட்டக்கூடாது, அருகாமையில் கோயில் இருக்கிறது. அந்த இடத்தில் பள்ளி கட்டிடம் வந்தால் கோயிலுக்கு இடையூராக இருக்கும் எனவே நாங்கள் சொல்லும் வேறு இடத்தில்தான் கட்டவேண்டும்," என இந்து முன்னணியினர்  போலீசாரிடமும்,  அதிகாரிகளுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பிறகு ஆர்.டி.. தலைமையில் நாளை பேச்சுவார்த்தை நடத்தி, அதன்பிறகு பள்ளி கட்டிடத்தை கட்ட முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து  அனைவரும் கலைந்து சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம்; பக்தர்கள் உற்சாகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Meenakshi - Sundareswarar Chariot; Devotees excited

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரை திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

மேலும், மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வுக்காக மதுரை வந்தடைந்தார். கள்ளழகர். உடன் பாரம்பரியமாக கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.