Skip to main content

“எங்கள் கருத்தை சொல்லிவிட்டோம்; குளோபல் டெண்டருக்கு பிறகுதான் முடிவெடுப்போம் என்றார்கள்” - போராட்டக்குழு பேட்டி

Published on 20/12/2022 | Edited on 20/12/2022

 

'We have expressed our opinion; they said we will take a decision only after the global tender'- struggle committee interview

 

சென்னையிலிருந்து சுமார் 70 கிலோமீட்டரும், காஞ்சிபுரத்திலிருந்து 15 கிலோமீட்டரும் தூரம் கொண்ட பரந்தூரில்  புதிய இரண்டாவது விமான நிலையம் அமைய ஏற்பாடுகள் நடந்தது. இதற்கு எதிராக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் போராட்டக்குழுவினர் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர். தொடர்ந்து பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பரந்தூர் மக்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்தினர்.

 

மீண்டும் அமைச்சர்கள், அரசு அதிகாரிகளுடன்  பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் நேற்று பேரணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.  இந்நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் 13 கிராமங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பரசன் மற்றும் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த கூட்டத்தில் கிராம மக்களின் கோரிக்கை, நிலம் கையகப்படுத்தும் பணி, இழப்பீடு உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றாக கூறப்படுகிறது.

 

பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டக் குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர், ''முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏகனாபுரம் கிராமத்தின் பின்பகுதியில் இரண்டு ஓடுதளங்கள் அமைய இருப்பதாக  வரைபடத்தை கட்டினார்கள். அந்த இரண்டு ஓடுதளங்களுக்கு நடுவில் ஒரு ஓடை வருகிறது. அந்த ஓடையானது அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய அத்தனை ஏரிகளுடைய வெள்ளநீர், அதாவது நீர் நிரம்பிய பிறகு கலங்கள் என்ற பகுதியில் வெளியேறக்கூடிய அதிகப்படியான நீரானது அந்த ஓடை வழியாக ஓடி எந்த விதமான தடையும் இல்லாமல் கொசஸ்தலையாற்றில் கலக்கிறது. அந்த ஓடையானது வரலாற்று சிறப்புமிக்க ஒரு முக்கியமான ஓடை. இந்த விமானநிலைய திட்டத்தால் தடைப்பட்டு, ஒரு காம்பவுண்ட் சுவரோ அல்லது கட்டிடங்களோ கட்டி தடுக்கப்படும் பொழுது பக்கத்து கிராமங்கள் ஏறக்குறைய 30 கிராமங்கள் அழிவை நோக்கிச் செல்லும். வேளாண்மை விவசாயம் பாதிக்கும். சென்னைக்கு கூட அதனால் வெள்ளப் பெருக்கு ஆபத்து ஏற்படும் என்று பலவகையில் விவரங்களை அடுக்கினோம். இத்தனை விவரங்களையும் உள்வாங்கிய அமைச்சர்கள் முதல்வரிடம் இதை நேரிலே தெரிவித்து நீங்கள் கேட்கின்ற ஒரு நல்ல முடிவை முதல்வர் எடுப்பார் என்று சொன்னார்கள். ஆனால் மூன்று மாதங்கள் நாங்கள் காத்திருந்தோம். எந்தவிதமான முடிவும் அரசு அறிவிக்காமல் இருந்தது. இந்நிலையில் உலகளாவிய குளோபல் டெண்டர் அதாவது கள ஆய்வு, பொருளாதார ஆய்வு மற்றும் பிற ஆய்வுகளை நடத்துவதற்காக குளோபல் டெண்டரை அறிவித்து, இருபதாம் தேதி அதற்கான கூட்டங்கள் அரசு சார்பில் நடைபெற்றுள்ளது. அந்த டெண்டர் வருகின்ற ஜனவரி 6ஆம் தேதி திறக்கப்படும் என்ற அறிவிப்பு வந்ததனால் நாங்கள் மீண்டும் அரசின் கவனத்திற்கு எங்கள் கோரிக்கையை எடுத்துச்செல்ல வேண்டும் என்பதற்காக நேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை நோக்கி பொதுமக்களின் சார்பில் பேரணியை நடத்தினோம்.

 

n

 

ஆனால் வருவாய் கோட்டாட்சியரும், காவல்துறை தரப்பினரும் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நீங்கள் அரசிடம் வைத்த கோரிக்கை எந்த அளவில் இருக்கிறது என்று அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் என்று எங்கள் பேரணியைத் தடை செய்து இந்த பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அழைத்தனர். அதைத் தொடர்ந்து இன்று மூன்று அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்தக் கூட்டத்தில் நாங்கள் மீண்டும் எங்கள் கருத்துக்களை எடுத்து வைத்தோம். அங்கு விமான நிலையம் திட்டம் வந்தால் ஏற்கனவே தெரிவித்த பாதிப்புகளோடு புதிய கருத்தாக பக்கத்திலே அரக்கோணம் கடற்படை விமான தளம் அதனுடைய பாதுகாப்பு அம்சங்கள் இந்த விமான நிலையத்தால் பாதிக்கப்படும் அதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று எடுத்துச் சொன்னோம். வடகிழக்குப் பருவ மழையால் அந்த ஓடை பகுதியில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 11 வயது மாணவன் இறந்த நிலையில் மூன்று நாட்களாக சடலம் கிடைக்காமல் அண்மையில் தான் சடலம் கிடைக்கப்பெற்றது என்றோம்.

 

அமைச்சர்கள் சார்பில், குளோபல் டெண்டர் நோக்கமே இந்த இடத்தில் வேளாண்மை நிலங்கள் இருக்கிறது; விவசாய நிலங்கள் இருக்கிறது; குடியிருப்பு பகுதிகள் இருக்கிறது. இந்நிலையில் செய்யப்படும் ஆய்வின் அடிப்படையில் நீங்கள் சொல்லியிருக்கின்ற கோரிக்கைகள் குறித்து ஆராயச் சொல்லி இருக்கிறோம். அத்தனை முடிவுகளும் வந்த பிறகுதான் நாங்கள் தெளிவான முடிவை எடுப்போம். அதுவரை நீங்கள் காத்திருங்கள். வேறு எந்த விதமான முடிவுக்கும் நீங்கள் செல்ல வேண்டாம். நீங்கள் பயப்பட வேண்டாம், அச்சப்பட வேண்டாம். விமான நிலையம் தொடர்பான அறிவிப்பை நாங்கள் வெளியிடுவது இந்த ஆய்வுக்குப் பிறகுதான். இப்போது அல்ல. அதனால் நீங்கள் அச்சப்படாமல் காத்திருங்கள். அந்த டெஸ்ட்டிற்காக வரக்கூடிய வல்லுநர்களை நாங்கள் கள ஆய்வு செய்ய அழைத்து வரும்போது உங்களுக்கு அறிவிப்போம். அப்பொழுது உங்கள் போராட்டக் குழு சார்பில் எங்களிடம் கொடுத்த அத்தனை தரவுகளையும் அங்கு தாருங்கள் என்று சொன்னார்கள்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எதிரொலித்த அதிருப்திகள்; வேங்கை வயல், பரந்தூரில் பதிவான வாக்குகள் எத்தனை தெரியுமா?

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Dissatisfaction echoed; Do you know how many votes were cast in Vengai vayal, Parantur?

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்த தேர்தலில் சில கிராமங்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக முன்னரே பகிரங்கமாக அறிவித்திருந்தது. குறிப்பாக புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தற்பொழுது வரை இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு தீர்வு கிடைக்காததால் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக வேங்கைவயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். மொத்தம் 561 வாக்காளர்களைக் கொண்ட வேங்கை வயலில் இறையூர் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேர் மட்டுமே வாக்குகளை பதிவு செய்துள்ளனர். வேங்கைவயல், இறையூர் ஆகிய இரண்டு கிராமங்களை சேர்ந்த மக்களிடமும் தொடர்ந்து அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க முன்வரவில்லை.

அதேபோல காஞ்சிபுரம் பரந்தூரில் விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் மற்றும் ஏகனாபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களும் தேர்தலை புறக்கணிக்கும் முடிவை எடுத்திருந்தனர். இந்நிலையில் ஏகனாபுரத்தில் தற்பொழுது வரை 17 ஓட்டுகள் மட்டுமே பதிவாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தமிழக மற்றும் புதுச்சேரியில் வாக்களிக்க இன்னும் 30 நிமிடங்கள் மட்டுமே எஞ்சியுள்ளது என்பது குறிப்பிடத் தகுந்தது. தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்த வேங்கை வயல் மக்கள்  இறுதிக்கட்டத்தில் தற்போது திடீரென வாக்களிக்க திரண்டுள்ளததால் வாக்குசாவடி பரபரப்பை அடைந்துள்ளது. 

Next Story

“இனியும் கட்சியில் நீடிக்க முடியாது” - ஆம் ஆத்மி அமைச்சர் அதிரடி ராஜினாமா!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
 Aam Aadmi Party minister resigns and says Can't stay in the party anymore

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து, அவரிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை சட்டவிரோத கைது என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ‘முதலமைச்சர் என்பதற்காக எந்த ஒரு சிறப்புச் சலுகையும் காட்ட முடியாது. மதுபானக் கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. தற்போதைய நிலையில் விசாரணை நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் நாங்கள் தலையிட முடியாது. பொதுவாழ்வில் ஈடுபடும் நபர்கள் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும்’ என்று கூறி ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நேற்று (09.04.2024) உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை திடீர் ராஜினாமா செய்துள்ளார். மேலும், அவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இது குறித்து ராஜ்குமார் ஆனந்த் கூறுகையில், “ஊழலுக்கு எதிரான ஆம் ஆத்மியின் வலுவான செய்தியைப் பார்த்த பிறகு, நான் அதில் சேர்ந்தேன். ஆனால் இன்று, கட்சி ஊழல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் தன்னைக் கண்டறிந்துள்ளது. அதனால்தான் நான் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்.

ஆம் ஆத்மி ஊழலில் ஆழமாக உள்ளது. மேலும் ஊழல்வாதிகளுடன் என்னால் வேலை பார்க்க முடியாது.  அரசியல் மாறினால் நாடு மாறும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். இன்று அரசியல் மாறவில்லை. ஆனால் அரசியல்வாதிகள் மாறிவிட்டார்கள். எனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன். எங்களிடம் 13 மாநிலங்களவை எம்பிக்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் யாரும் பட்டியலினத்தவர், பெண்கள் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை. இந்த கட்சியில் பட்டியலின எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், அமைச்சர்களுக்கு மரியாதை இல்லை. அத்தகைய சூழ்நிலையில், அனைத்து பட்டியல் இன மக்களும் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். இதனால், இனியும் நான் கட்சியில் நீடிப்பது கடினம்.” என்றார்.