style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு பொதுமக்களின் கருத்துகளை கேட்டு, அவர்களின் ஒப்புதலை பெற்ற பின்பு தான் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற, தமிழ் விவசாயிகள் சங்க மாநாட்டில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்திற்காக திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் நிலம் எடுப்பு முறைப்படி நடந்துள்ளது.

Advertisment

மாவட்ட ஆட்சியர்களின் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அவர்களின் தலைமையில் மக்களிடம் பேசி, அவர்களின் கருத்தை கேட்டு, அவர்களின் ஒப்புதலை பெற்றுதான் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.