Advertisment

“மனு அளித்ததின் பேரில் ஆய்வுக்கு வந்துள்ளோம்”-மோசடி நபரைக் கைது செய்த சைபர் கிரைம்!

publive-image

திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்த பெனாசீர் பாத்திமா என்பவர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் அவரது கணவர் அபுல்ஹசன், என்பவருடன் வசித்து வந்ததாக தெரிகிறது. கடந்த 14.06.2021-ஆம் தேதி தனது மருமகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இறந்து விட்டதாகவும், எனவே தனது மகளின் வாழ்க்கைக்கு உதவி செய்யவேண்டி திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 16.08.2021ஆம் தேதி பெனாசீர் தந்தை பாஷா மனு கொடுத்துள்ளார்.

Advertisment

இந்நிலையில், கடந்த 12.10.2021-ஆம் தேதி மதியம் 3.00 மணியளவில் பாஷாவின் வீட்டிற்கு வந்த ஒருவர், தன்னுடைய பெயர் தேவபிரசாத் என்றும், தான் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிவதாக அறிமுகம் செய்து கொண்டுள்ளார். மேலும் அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவி தொகை ரூ.5,50,000/- மற்றும் கல்வித்துறையில் வேலை பெறுவதற்கு ஆய்வு மேற்கொள்ளவேண்டி வந்திருப்பதாக தெரிவித்துள்ளார். அதோடு உதவி தொகை பெறுவதற்கு ரூ.30,000/- வரி கட்டவேண்டும் என்றும், வங்கி கணக்கு எண்.40006867151 என்ற ஸ்டேட் வங்கி கணக்கில் பணம் செலுத்த கூறியுள்ளார்.

Advertisment

பாஷாவின் மருமகன் தூக்கு போட்டு இறந்த சம்பவ இடத்தை செல்போனில் படம் பிடித்துள்ளதை அலுவலகத்தில் காட்ட வேண்டும் என்று கூறி, மகளின் செல்போனையும் வாங்கி சென்றுள்ளார். பின்னர் வரி பணம் ரூ.30,000/-த்தை மேற்கண்ட வங்கி கணக்கில் செலுத்துமாறு செல்போனில் அடிக்கடி பேசி கேட்டதால் சந்தேகம் அடைந்த பாஷா திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று இதுகுறித்து கேட்டுள்ளார். அங்கு இதுபோல் யாரையும் அனுப்பவில்லை என்று தெரிவித்த நிலையில் தன்னை ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டி திருச்சி மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். இப்புகார் மனுவை பெற்ற சைபர் கிரைம் காவலர்கள் சேலம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (35) என்பவரை நேற்று 20.10.2021-ஆம் தேதி கைது செய்தனர்.

CYBER CRIME POLICE petition trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe