Skip to main content

"எங்களுக்கு 34 கோடி..!"– இதைச் சொன்ன எம்.எல்.ஏ. ஒரு நாள் கூட அலுவலகத்திற்கு போகவில்லை!!

Published on 20/02/2020 | Edited on 20/02/2020

நமது எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் மக்கள் பணிக்காகவே தங்களை அர்பணித்தவர்கள்...(?) அப்படிப்பட்டவர்கள் அமர்ந்து பணியாற்ற ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு அலுவலகம், சென்னையில் தங்குவதற்கு ஒரு விடுதியும்உண்டு. இது தவிரமாதம் ஒன்னரை லட்சம் சம்பளம், படிகள், சலுகைகள் என ஏராளம் உண்டு என்பதும் கூடிக் கொண்டே போகிறது இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் இப்போது என்ன புதிதாக 17 கோடி அது தானே விஷயம். 

இதோ செய்தி,

 

 "We have 34 crores ..!" Not even going to the office one day !!

 

தமிழக சட்டமன்றத்தின் அவை குழு கூட்டம் இன்று சட்டமன்ற உறுப்பினர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சட்டமன்ற அவை குழு தலைவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு தலைமை தாங்கினார். பிறகு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை  தென்னரசு கூறும்போது,

நமது சட்டமன்ற உறுப்பினர்கள் குடியிருப்பு விடுதியில் பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் அறையில்  8 லிப்ட்டுகள் 4 பிளாக்குகளில் அமைக்க ரூபாய் 2 கோடியே 6 லட்சம் மதிப்பிலும், 240 சட்டமன்ற உறுப்பினர் விடுதிகளுக்கு ரூபாய் 2.74  கோடி மதிப்பில் ஆர்.ஓ.வாட்டர் எனப்படும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள் அமைக்கும் பணியும், அடுத்து 1 கோடியே 5 லட்சத்தில் சட்டமன்ற உறுப்பினர் வளாகத்தில் பேவர் பிளாக்  அமைக்கவும், ரூபாய் 3 கோடியே 75 லட்சத்தில் தீயணைப்பு சாதனங்கள் பொருத்தும் வேலையும், 4 கோடியே 50 லட்சத்தில் பூங்காக்கள் அமைக்கவும் ஒரு கோடி மதிப்பில் விருந்தினர்கள் வந்தால் சோபா செட்டுகள், சாப்பாட்டு மேஜைகள், நாற்காலிகள் ,டேபிள்கள் புதிதாக அமைக்கும் பணி என மொத்தம் 17 கோடி மதிப்பில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர் குடியிருப்பு விடுதிகளிலும் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இது தவிர தமிழ்நாட்டில் 174 சட்டமன்ற உறுப்பினர் தொகுதி அலுவலகம் ரூ.11 கோடியே 60 லட்சம் மதிப்பில் பொதுமக்கள் வசதிக்கு ஏற்பவாறு கட்டவும் ,சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலக வளாகத்தில் அவர்கள் அறைகளுக்கு ரூ .5 கோடி மதிப்பில் வண்ணங்கள் பூசவும்  நிதி ஒதுக்க இந்தக் குழுவால் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார் தென்னரசு. 

இக்கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பலர் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். பொதுவாக சொல்ல வேண்டுமென்றால் பெயின்ட் அடிக்க டேபிள், சேர்வாங்க ஏறக்குறைய 34 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இவ்வளவையும் சொன்ன எம்.எல்.ஏ. தென்னரசு ஈரோட்டில் உள்ள தனது தொகுதி அலுவலகத்திற்கு இந்த நான்கு வருடத்தில் ஒரு நாள் கூட செல்லவில்லை என்கிறார்கள் தொகுதி மக்கள். காரணம் அந்த அலுவலகத்திற்கு வாஸ்து சரியில்லை என்றும் ராசியில்லையெனவும் கூறுகிறாராம். தென்னரசு எம்.எல்.ஏ.அலுவலகமாக ஈரோட்டில் பயன்படுத்துவது பொதுப்பணித்துறைக்கு சொந்தமான காளிங்கராயன் விருந்தினர் விடுதியைத் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.