Advertisment

''எங்களுக்கு சம்பளம் கம்மி;பாட்டிலுக்கு 10 ரூபாய் வேணும் ''-டாஸ்மாக் ஊழியர் ஓபன் டாக்

publive-image

Advertisment

டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கும் குடிமன்களுக்கும் இடையே அவ்வப்போது ஏற்படும் விவாதங்கள் வீடியோ காட்சிகளாக சமூக வலைத்தளங்களில் வைரலாவது வழக்கம்.இந்நிலையில்தங்களுக்கு அதிக சம்பளம் இல்லாததால் பாட்டில் ஒன்றுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்குவதாக டாஸ்மாக் கடை ஊழியர் ஒருவர் பேசும் வீடியோ காட்சி ஒன்று வாடிக்கையாளர்களால் பதிவு செய்யப்பட்டு தற்போது அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தஞ்சை தற்காலிக பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் ஊழியர் ஒருவர் பேசும் இந்த வீடியோ காட்சியில், ''சம்பளம் பத்தல அதனால பாட்டிலுக்கு 10 கூடுதலா விக்கிறோம். எங்களுக்கு சம்பளம் கம்மி என சொல்கிறார். கவர்மெண்ட் இப்படி விக்க சொல்கிறார்களா என வாடிக்கையாளர்கள் கேட்க, ''எங்களுடைய சூழ்நிலை இப்படித்தான்'' என்கிறார் ஊழியர். அதற்கு வாடிக்கையாளர்கள் 'சம்பளம் பத்தவில்லை என்றால் அரசாங்கத்திடம் கேளுங்க அதற்காக எங்களிடம் 10 ரூபாய்க்கு கேட்பீர்களா' என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

TASMAC Thanjai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe