publive-image

Advertisment

கோவை மாவட்ட மக்களைச் சந்திப்பதற்காகவும், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக சில நலத்திட்டங்களைத் தொடங்கிவைப்பதற்காகவும் இரண்டு நாள் பயணமாக நடிகரும், அக்கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று (02/08/2021) கோவை சென்றார்.

அதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்இன்று காலை, ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று கிராம சபை நடத்தக் கோரி கமல்ஹாசன் உள்ளிட்ட கட்சிநிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கமல்ஹாசன், "கிராம சபை கூட்டம் நடத்த அனுமதிகோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு தந்தோம்" எனத் தெரிவித்தார்.

Advertisment

ஆகஸ்ட் 15ஆம் தேதி கிராம சபை நடத்த அனுமதிகோரி, தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் மனு அளித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.