தமிழகத்தை கலங்கடித்துவரும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை தொடர்ந்து மயிலாடுதுறை அறக்கட்டளை சார்பில் நாடனம், மற்றும் கரகாட்டம் உள்ளிட்ட கலைஞர்களுக்கு ஒரு வேண்டுகோளை வைத்துள்ளனர்.

pollachi

Advertisment

கலைத்தாய் அறக்கட்டளையின் தலைவர் கிங்பைசல் வெளியிட்டுள்ள வேண்டுகோளில் "கலைஞர்களே சிந்தியுங்கள் நம் கலாச்சார சீரழிவிற்கு நம் கலையும் ஓர்காரணமாக அமைந்துவிடக்கூடாது என்பதர்க்காகவே இந்த வேண்டுகொளைமுன்வைக்கிறோம். நவநாகரீகம் என்கிற என்னத்தில் மக்கள் தங்களது ஆடைகளை அரைகுறையக அணிந்ததன் விளைவுதான் இன்று பாலியல் வன்கொடுமைகளுக்கு முதல்காரணம். அதுபோல் வயிற்று பிழைப்பிற்காக கோயில் திருவிழாக்களிலும், அரசு விழாக்களிலும், கலையரங்கங்களிலும், மக்கள் கூடும் இடங்களிலும் கரகம் ஆடும் நம் கலைஞர்களும் அரைகுறை ஆடையில் ஆடிவருவது வேதனையான ஒன்று. அப்படி அறைகுரை ஆடைகளோடு ஆடுவதை தவிர்த்து நம்பாரம்பரியமான "புடவை"கட்டி இனிவரும் காலங்களில் ஆடினால் மக்களுக்கு ஓர் நல்ல விழிப்புணர்ச்சி ஏற்படும்.

Advertisment

நம்முடைய கலையை நம்முன்னோர்கள் உயிராக வளர்த்தார்கள். அதை நாம் வளர்க்க வில்லை என்றாலும் சீரழித்து விடக்கூடாது என்பதற்காகவும், நம்மால் கலாச்சார சீரழிவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும், கிராமப்புற, நகர்ப்புற இளைஞர்கள் கரகாட்டம், உள்ளிட்ட கவர்ச்சிகரமான நடனங்களால் சீரழிந்து விடக்கூடாது என்பதற்காகவும் புடவை அணிந்து ஆடினால் நம் முன்னோர்களின் கலையை மீட்கமுடியும். திரைத்துறைக்கும் நாம் பாடம் புகட்டியதாக அமையும்". என்று அதில் கூறியிருந்தார்.

கலைத்தாய் அறக்கட்டளையின் வேண்டுகோள் குறித்து கும்பகோணம் கரகாட்டக் கலைஞர் ஒருவரிடம் விசாரித்தோம்." அவர் சொல்வது உண்மை தான். ஒருகாலத்தில் கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம், என மக்களை மகிழ்வித்தனர் நம் முன்னோர்கள். மக்களும் கலையை கலையாக கண்டுரசித்தனர்.

அப்போது கிராமப்புறங்களில் கோயில் திருவிழா, உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு கரகாட்டம் பிரதானமாக இருந்தது. ஆனால் இன்று மக்களின் மோகமும் கவர்ச்சிக்காக மாறிவிட்டது. தொழிலும் நலிவடைந்து விட்டது. மக்களின் விருப்பத்திற்காகவும், வயிற்றுப்பிழைப்பிற்காகவும் அரைகுறையான ஆடை அணிய வேண்டிய கட்டாயத்தில் இந்த தொழில் தள்ளப்பட்டுவிட்டது. கரகாட்ட கலைஞர்களுக்கு வேறு தொழில் தெரியாது. என்பதால் மனம்நொந்தே ஆடுகிறோம்.பொள்ளாச்சி சம்பவத்திற்கு பிறகு கலைஞர்களுக்குள் பேசியிருக்கிறோம். நாம் ஒரு துளிக்கூட காரனமாக இருக்கக்கூடாது என முடிவெடுத்துவருகிறோம். பழையபடி புடவை கட்டி கரகாட்டம் ஆடவேண்டும் என்பதை பறப்புவோம். இதற்கு அரசாங்கம் எங்களுக்கு உதவி செய்து வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும்.