தமிழக அரசின் போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பண பலன்களை வழங்கும் விழா மதுரையில் நடந்தது.

Advertisment

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஏழை மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள், நல்ல திட்டங்களை செயல்படுத்தி வரும் நமது முதல்வர் தற்போது போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக 1,093 கோடியை ஒரே தவணையில் வழங்கியுள்ளார்,

 We do not drink alcohol on the way to MGR  Minister Srinivasan's speech

இதேபோல் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக இயக்கத்தை அசைத்து விடலாம் என பல பேர் நினைத்தனர். டீக்கடை நடத்தியவருக்கும்.விவசாயம் செய்தவருக்கும் என்ன தெரியும் என்று விமர்சனம் செய்தனர். மண்ணை அள்ளிய விவசாயம், கடின உழைப்பால் உயர்ந்த வரும், இரட்டைக் குழல் துப்பாக்கி போல் முதல்வரும், துணை முதல்வரும் செயல்பட்டு வருகின்றனர். இன்னும் 20 ஆண்டுகள், ஆனாலும் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு தான், தமிழகத்தில் ஆட்சி நடத்தும்.

Advertisment

அதுபோல் அதிமுகவை யாரும் அசைக்க முடியாது. சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் உள்ளது போல் தமிழகத்தில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் போக்குவரத்தில் புரட்சி செய்தவர் நமது முதல்வர் எடப்பாடி பழனிசாமி. எம்.ஜி.ஆர் மது குடிக்க மாட்டார், புகை பிடிப்பதும் இல்லை அது போல் அவரது ரசிகர்களான நாங்கள் யாரும் மது அருந்துவதில்லை, புகை பிடிப்பதில்லை என்று கூறினார். இந்த விழாவில் கட்சி பொறுப்பாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.