தனது விளக்கத்தை கேட்க்காமல் எப்படி இடமாற்றம் செய்யலாம் என மதுரையில் வாக்குபதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள இடத்தில் பெண் அதிகாரி நுழைந்த விவகாரத்தில் பணியிடை மாற்றம் செய்யப்பட்ட நடராஜன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் உள்ள ஆவண அறைக்குள் பெண் அதிகாரி ஒருவர் சென்று ஆவணங்களை எடுத்ததாக மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு வெங்கடேசன் தொடுத்த வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியரை மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மதுரையில் கடந்த 20 ஆம் தேதி பெண் அதிகாரி ஒருவர் வாக்குப்பதிவு ஆவணங்கள் உள்ள அறைக்குள் சிலருடன் நுழைந்ததாகவும், அவர் அங்கே 2 மணி நேரம் இருந்ததாகவும், முக்கிய சில ஆவணங்களை எடுத்துச்சென்றதாகவும் தகவல் பரவியது. இதையடுத்து எதிர்க்கட்சியினர் அங்கே வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தாசில்தார் சம்பூர்ணம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில்,
இது தொடர்பாக மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு வெங்கடேசன் தொடுத்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில் மதுரை மக்களவை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைத்துள்ள மையத்தில் சில பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தன. ஆட்சியரின் உதவியாளர் அறிவுறுத்தலின் பேரில் வட்டாச்சியர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளஇடத்திற்குசென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரி அனுப்பிய பரிந்துரை அடிப்படையில் 2 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என வாதிடப்பட்டது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்த வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜனைமாற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதேபோல் உதவி தேர்தல் அதிகாரிகள் மாற்றம் செய்யவும், ஆட்சியரின் உதவியாளர், வட்டாட்சியர் மற்றும் அவரை உள்ளே அனுமதித்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.
இந்த விவகாரத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட நடராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது விளக்கத்தை கேட்க்காமல் எப்படி இடமாற்றம் செய்யலாம் எனபணியிலிருந்து மாற்றப்பட்ட உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிமன்றம் பணிமாற்றம் செய்ய எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை தேர்தல் ஆணையம் கொடுத்த அறிக்கையில் ஏற்கனவே மாவட்ட ஆட்சியரையும்அவரது உதவியாளரையும் பணிமாற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தார்கள் அதைத்தான் தாங்கள் பதிவு செய்தோமே தவிர நீதிமன்றம் இடமாற்ற உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை என விளக்கமளித்தனர். மேலும் இந்த உத்தரவை நிறுத்தி வைக்க முடியாது என்று உத்தரவிட்டு வழக்கை ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.