'We can't take it anymore' - Pmk Anbumani Ramadoss

வேலூர் மாவட்டம் வேலூர் தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக நீதி காக்க சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கருத்தரங்கம் கூட்டம் நடைபெற்றது.

Advertisment

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''இந்தியன் ஸ்டேட்கள் ஆக்ட் 2008 படி மத்திய அரசு மட்டும் கிடையாது, மாநில அரசு மட்டும் கிடையாது, உள்ளாட்சி மன்றங்களுக்கும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தலாம். பஞ்சாயத்து தலைவருக்கே கணக்கெடுப்பு நடத்துவதற்கு அதிகாரம் இருக்கிறது. ஒரு சாதாரண பஞ்சாயத்து தலைவருக்கு இந்தியன் ஸ்டேடஸ்கள் ஆக்ட் 2008 படி அதிகாரம் இருக்கையில் முதலமைச்சருக்கு இல்லையா?. தமிழக அரசுக்கு இல்லையா?

Advertisment

இனியும் எங்களால் பொறுக்க முடியாது. எல்லா கட்சிகளும் ஓரளவுக்கு ஒருமித்த மனநிலையில் வந்துள்ளனர். அடுத்தது எங்களுக்கு தெரிந்ததெல்லாம் வீதியில் இறங்கினால் தமிழகம் தாங்காது. இது பாட்டாளி மக்கள் கட்சியின் பிரச்சனை கிடையாது. தமிழ்நாடு முழுமைக்குமான பிரச்சனை. இதுதமிழ்நாட்டின்வளர்ச்சி பிரச்சனை சமூக நீதிப் பிரச்சனை'' எனக் கூறினார்.