/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a824_3.jpg)
'பேரிடர்களுக்கு இனியும் நாம் இயற்கையை குறைசொல்ல முடியாது; அதற்கெல்லாம் நாமே காரணம்' என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு ஏற்கனவே வழக்கானது நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், பாரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று விசாரணைக்க வந்தது.
அப்போது நீதிபதிகள், 'உலக நாடுகளில் பிளாஸ்டிக் கழிவுகளை குப்பைத் தொட்டிகளில் போடுகின்றனர். ஆனால் நாம் கண்டகண்ட இடங்களில் வீசி எறிகிறோம். இதனால் நிலம் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகிறது. தேசிய நெடுஞ்சாலையில் ஓரங்களில் டன் கணக்கில் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களில் பேரிடர்கள் ஏற்படுகிறது என்றாலோ,இயற்கை சீற்றம் ஏற்படுகிறது என்றாலோ அதற்கெல்லாம் வீசி எறியக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் தான் காரணம். எனவே இனி இயற்கையை மட்டுமேநாம் குறைசொல்ல முடியாது. அதற்கு நாமும் ஒரு காரணம். மக்கள் தங்களுடைய உரிமைகள் பற்றிப் பேசுகிறார்கள். அதேபோல் கடமைகளைப் பற்றி கவலைப்பட வேண்டும்' என தெரிவித்தனர்.
இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டு, வழக்கு விசாரணையானது இரண்டு வாரங்களுக்கு பின் ஒத்தி வைக்கப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)