
திரைப்பட இயக்குநரும் நடிகரும் தயாரிப்பாளருமான மனோபாலா(69) உடல் நலக்குறைவால் காலமானார். கல்லீரல் தொடர்பான பிரச்சனையால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மறைந்துள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத்திறமை கொண்ட நபராகத் திகழ்ந்தவர். இவரது மறைவு திரையுலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மனோபாலாவின் உடல் நாளை (04.05.2023) காலை 10.30 மணிக்கு வடபழனியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பலர், மனோபாலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில், ''மனோபாலாவின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத்தெரிவித்துக் கொள்கிறேன். நாங்க எல்லாம் ஒரே காலகட்டத்தில் சினிமாவிற்கு வந்தவர்கள். 45 வருடப்பழக்கம். அவருடைய இயக்கத்தில் 'பிள்ளை நிலா', 'மல்லுவேட்டி மைனர்' ஆகிய படங்களில் நடித்திருக்கிறேன். என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஒரு மிகச் சிறந்த நடிகர். திரையுலகத்தினருக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களைத்தெரிவித்துக் கொள்கிறேன்'' எனத்தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)