Advertisment

'நாங்கள் ரஜினியின் ஆயுட்கால கைதிகள்' - ஜெயிலரை பார்க்க சிறைவாசிகள் வேடத்தில் வந்த ரசிகர்கள்

'We are Rajini's lifers'- fans celebrated in the guise of prisoners

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி, மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' படம் இன்று (10.08.2023) உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.

Advertisment

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு, திரையரங்கு முன் வழக்கம் போல் பேனர் வைத்து, பட்டாசு வெடித்து கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். இதனால் திருவிழா போல் ஒவ்வொரு திரையரங்கமும் காட்சி அளிக்கிறது. இந்தக் கொண்டாட்டம் இந்தியாவைத் தாண்டி கனடா, சைனா உள்ளிட்ட நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு திரையரங்கிலும் ரஜினி ரசிகர்கள் வித்தியாசமாகக் கொண்டாடி வருகின்றனர்.

Advertisment

ரசிகர்களைத் தாண்டி திரைப் பிரபலங்களும் திரையரங்கிற்கு வருகை தந்துள்ளனர். லதா ரஜினிகாந்த், திரையரங்கின் உள்ளேகேக் வெட்டி மகிழ்ந்தார். மேலும் அனிருத்'ஹுக்கும்...' பாடலைப் பாடி ரசிகர்களுடன் கொண்டாடினார். தனுஷ், ரம்யா கிருஷ்ணன், பாடகர் விஜய் யேசுதாஸ், ராகவா லாரன்ஸ், காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், பாடலாசிரியர் சூப்பர் சுபுஉள்ளிட்டோர் திரையரங்குகளில் ரசிகர்களுடன் படம் பார்த்து ரசித்தனர். பல்வேறு மாவட்டங்களிலும் தியேட்டர்களில் ரஜினி ரசிகர்கள் பல்வேறு கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தனர். திருவண்ணாமலையில் ரஜினியின் பேனருக்கு பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள் 501 தேங்காய்களை உடைந்தனர். மதுரையில் தங்க ரீகல் திரையரங்கிற்கு சிறைவாசிகள் போல வேடம் அணிந்து வந்த சில ரசிகர்கள் 'தாங்கள் ரஜினியின் ஆயுட்கால கைதிகள்' என்று ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

theater madurai rajinikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe