அமைச்சர்களுடனான சந்திப்பில் தேர்தல் கூட்டணி குறித்துபேசவில்லைஎனவும், இடஒதுக்கீடு குறித்தேபேசப்பட்டது எனவும்பாமகநிறுவனர்ராமதாஸ்தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
''தமிழக அமைச்சர்கள் தங்கமணி,வேலுமணி ஆகியோர் இன்று (11.01.2021) என்னை தைலாபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்கள். வன்னியர்கள் இட ஒதுக்கீடு குறித்துப் பேசப்பட்டது. பொங்கல் திருநாளுக்குப் பிறகு மீண்டும் இதுகுறித்துப் பேசுவதாக உறுதியளித்துச் சென்றுள்ளனர்.
அமைச்சர்களுடன் வன்னியர் இடப்பங்கீடு குறித்து மட்டும் தான் பேசப்பட்டது. அரசியலோ, தேர்தல் குறித்தோ பேசப்படவில்லை. வன்னியர் இடப்பங்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரைகூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.