Advertisment

''வீட்டில் திருட்டு போனால் நாங்கள் பொறுப்பல்ல'' காவல்துறையினரின் போஸ்டரால் அதிர்ந்த மக்கள்!! 

விருதுநகர்,ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள நத்தம்பட்டி பகுதியில் காவல்துறையினர் ஒட்டியுள்ள போஸ்டரால்மக்கள் அதிர்ந்துள்ளனர்.

Advertisment

நத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்டு அழகாபுரி, சீலநாயக்கன்பட்டி,அறவிலைவென்றான்,அக்கணாபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதாக புகார்கள் காவல் நிலையத்திற்கு குவிந்து வருகின்றன.

Advertisment

 'We are not responsible for theft at home anymore'

இந்நிலையில் நத்தம்பட்டி காவல் பகுதிக்குட்பட்ட இடங்களில்காவல்துறையினர் ஊர் முழுவதும் பொது இடங்களில் நோட்டீஸ்களை ஒட்டியுள்ளனர். அந்த நோட்டீஸில் நத்தம்பட்டிக்குஉட்பட்ட பகுதி மக்கள் வெளியூர் செல்லும் போது வீடு பூட்டப்பட்டு சாவி யாரிடம் இருக்கிறது,வீட்டிற்கு எத்தனை வாசல்கள் உள்ளது என்பதை காவல்துறைக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்காவிட்டால் வீட்டில் திருட்டு போகும் பொருட்களுக்கு காவல்நிலையம் பொறுப்பல்ல என்று அச்சிடப்பட்டிருந்தது.

இந்த போஸ்டர் மக்கள் மத்தியில் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

police Poster Virudhunagar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe