"நாங்கள்  ஊடகத்தின் குரல் வலையை நெறிப்பவர்கள் அல்ல"- மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் 

publive-image

நாங்கள் மற்ற கட்சிகள் போல் ஊடகத்தின் குரல் வலையை நெறிப்பவர்கள் அல்ல என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி தினம் நாடு முழுதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல தலைவர்களும், சினிமா பிரபலங்களும் சமூக வலைத்தளங்களின் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள். பெரும்பான்மையான மக்கள் கொண்டாடும் அனைத்து திருவிழாக்களுக்கும் வாழ்த்து சொல்ல வேண்டியது அனைவரின் கடமை. தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுக தலைவராக இருந்து வாழ்த்து சொல்லவில்லை எனில் அது பரவாயில்லை. தற்போது தமிழகத்தின் முதல்வராக இருக்கையில் அனைத்து பண்டிகைக்கும் வாழ்த்து சொல்வது தான் முறையாக இருக்கும்.

சட்ட ஒழுங்கு தமிழகத்தில் மிக மிக சீரழிந்துள்ளது. யாரும் பாதுகாப்பாக நடக்க முடியவில்லை. காவலர்கள் மேல் தாக்குதல் நடக்கிறது. தமிழக அரசு குற்றம் செய்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். எட்டு வழிச்சாலை திட்டத்தில் நாடு முன்னேறுவதற்கு உள்கட்டமைப்பு வசதிகள் வேண்டும். தயவு செய்து அதில் அரசியல் பண்ணாதீர்கள். நாங்கள் மற்ற கட்சிகள் போல் ஊடகத்தின் குரல் வலையை நெறிப்பவர்கள் அல்ல. கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் இருக்கின்றது. தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீதும் தேசத்திற்கு எதிராக செயல்படுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறினார்.

இதையும் படியுங்கள்
Subscribe