Advertisment

என்னுடைய தொலைப்பேசியை ஒட்டுக்கேட்டு வருகிறார்கள் - அண்ணாமலை கோபம்

fgh

பா.ஜ.க.வின் மாநில தலைமை அலுவலகமான சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் நேற்று இரவு பெட்ரோல் குண்டுகளை வீசி சென்றனர். காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அலுவலகத்தின் நுழைவு வாயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் யாருக்கும் காயமில்லை. இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது, "பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை தேசியப் புலனாய்வு அமைப்பான என்ஐஏ விசாரிக்க வேண்டும். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீரழிந்து உள்ளது. மாநிலம் முழுவதும் தேர்தல் பணிமலைகள் மீது தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், தற்போது கட்சி தலைமை அலுவலகத்திலேயே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. முதல்வர் இதில் கவனம் செலுத்தவில்லை என்றால் என்ன ஆகுமென்றே தெரியவில்லை.

Advertisment

நீட் தேர்வுக்காக இதை நடைபெற்றுள்ளதாக ஒருவரை கைது செய்துள்ளதாக தற்போது கூறுகிறார்கள். கைது செய்யப்பட்டுள்ள அவருக்கு முதலில் நீட் என்றால் என்ன என்று கூட தெரியவாய்ப்பில்லை. கல்விக்கும் அவருக்கும் பல கிலோமீட்டர் தொலைவு இருக்கும். திமுக ஆட்சிக்கு வந்ததும் என்னுடைய தொலைப்பேசியை ஒட்டுக்கேட்டு வருகிறார்கள். என்னுடைய பாதுகாப்பை "ஒய்" பிரிவில் இருந்து "எக்ஸ்" பிரிவுக்கு மாற்றினார்கள். ஒரேஒரு காவலரை பாதுகாப்பு பணிக்கு வைத்துள்ளார்கள். அவரை மட்டும் ஏன் வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை. தொலைப்பேசியை "பக்" செய்து தகவல்களை தெரிந்துகொள்ள பார்க்கிறார்கள். நாங்கள் கோழைகள் கிடையாது. எதையும் எதிர்கொள்வோம்" என்றார்.

Advertisment

Annamalai bug
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe