Advertisment

கட்சி கொடியை சாதாரண உறுப்பினரை வைத்து ஏற்றுவதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி!!-கமலஹாசன்

KAMAL

நேற்று சேலம்மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நடிகர் கமல் பேசும்போது பேசுவதற்காக மேடை ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுஆனால் அனுமதி மறுக்கப்பட்டுள்ள காரணத்தால் நடுத்தெருவிலிருந்து உங்களிடம் பேசிக்கொண்டு இருக்கிறேன்.

Advertisment

எவ்வளவு தடைகள் இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் இந்த காளை. மக்கள் நீதி மய்யம் கட்சியின் வளர்ச்சிதான் இந்த பதட்டத்திற்கு காரணம். சட்டசபையில் எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்த பொழுது பொறுப்புள்ள அரசியல் கட்சியாக நாங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்

Advertisment

60 கிராமங்கள் உடைய இந்த மகுடஞ்சாவடியில் பேருந்து நிலையம் கிடையாது. அதை நான் உங்களுக்காக அரசிடம் கேட்பேன். கண்டிப்பாக ஒரு காலம் வரும் அதுவும் விரைவில், உங்களுடன் எப்பொழுதும் இருக்கும் வகையில் அந்த சூழல் வரும். அனுமதி மறுக்க மறுக்க கூட்டம் பெருகிக்கொண்டே இருக்கும்.

நான் அரசை கேட்டுக்கொள்வதெல்லாம் ''நீங்கள் எனக்கு அனுமதியை மறுத்துக்கொண்டே இருங்கள்''. கட்சி கொடியை எங்கள் கட்சி உறுப்பினர்களை வைத்து ஏற்றி மகிழ்வது தான் எங்களுக்கு பெருமை. அந்த வகையில் இங்கே மகுடஞ்சாவடியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடி ஏற்றப்படுகிறது." என்றார். சேலம், மல்லசமுத்திரம் , மல்லூர், எளம்பிளைஎன பல ஊர்களிலும்பிரச்சாரம் மேற்கொண்டார்.

kamalhasan Makkal needhi maiam Salem
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe