சென்னையில் கரோனாபாதிப்பு கட்டுக்குள் வராத நிலையில், மே2 ஆம்தேதி இது தொடர்பாக ஆலோசிக்க தமிழக அமைச்சரவை கூட இருப்பதாகஅரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தற்போது சென்னை மாநகராட்சிஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,
சென்னையில் கரோனாபரிசோதனையை 2000 வரை அதிகரித்து மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களை ஒப்பிடும்போது சென்னையில் மக்கள் அதிகம். இதுவரை சென்னையில் 22 ஆயிரம் பேருக்குகரோனாபரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோருடன்தொடர்பில் இருந்தவர்களைதான் தற்போது வரை பரிசோதனை செய்துள்ளோம்.
இந்தியாவில், சென்னையில் இறப்பு விகிதம் என்பது 1.8 சதவீதமாக உள்ளது. இது குறைவுதான். தனிநபர் இடைவெளி பின்பற்றபடுவதற்கான கட்டுப்பாடுகளைஇன்னும் கடுமையாக்க உள்ளோம்.சென்னை மாநகராட்சியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் 1.75 லட்சம் பேர் இருக்கின்றனர் என தெரிவித்தார்.