Advertisment

"முதலமைச்சரிடம் நாளை அறிக்கை சமர்ப்பிக்க உள்ளோம்"- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி!

publive-image

சென்னையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிஇன்று (14/09/2021) மாலை05.00 மணிக்குக்காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisment

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "6- ஆம் வகுப்பு முதல் 8- ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறப்பது குறித்த அறிக்கையை முதலமைச்சரிடம் நாளை (15/09/2021) சமர்ப்பிக்க உள்ளோம். 6- ஆம் வகுப்பு முதல் 8- ஆம் வகுப்பு வரை அல்லது 1- ஆம் வகுப்பு முதல் 8- ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்கலாமா என ஆலோசித்தோம். அதிகபட்சமாகக் கன்னியாகுமரியில் 87% பேரும், குறைந்தபட்சமாகக் கோவையில் 67% மாணவ, மாணவிகளும் பள்ளிக்கு வந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் தான் பள்ளிகளில் மாணவர்களின் வருகை குறைவாக உள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்ட 14 நாட்களில் இதுவரை 83 மாணவ, மாணவிகளுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது" என்றார்.

Advertisment

Chennai pressmeet anbil mahesh minister
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe