Skip to main content

பேருந்துகள் இயக்கப்படாததால் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளோம் - போக்குவரத்துக் கழகம் தகவல்!

Published on 10/10/2020 | Edited on 10/10/2020

 

We are in financial crisis due to non-operation of buses - Transport Corporation Information

 

மகள் திருமணச் செலவுக்காக வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் கோரி அரசு போக்குவரத்து துறையில் பணியாற்றி வரும் நடத்துனர் துரைசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணையில், கரோனா நெருக்கடி மற்றும் ஊரடங்கால் பேருந்துகள் இயக்கப்படாமல் இருப்பதால் கடும் நிதி நெருக்கடியில் போக்குவரத்துக் கழகம் சிக்கியுள்ளது. எனவே ஊழியரின் வருங்கால வைப்பு நிதியில் இருந்து தொகையைத் தர முடியவில்லை என போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் ஊழியருக்கு தரவேண்டிய தொகையைக் கணக்கிட்டு இரண்டு வாரத்தில் வழங்க கோவை மண்டலப் பொதுமேலாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்