Advertisment

நாங்க அதிமுகதான்... இருந்தாலும்... கலைஞர் நினைவிடத்தில் 80 வயது மூதாட்டி

kalaignar

சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் இன்று பலர் அஞ்சலி செலுத்தினர். இதில் 80 வயது மூதாட்டி வெள்ளையம்மாள் என்பவரும் அஞ்சலி செலுத்தினார்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

பின்னர் நக்கீரன் இணையதளத்திடம் பேசிய அவர், ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மேலகனச்சேரி எங்க ஊர். இங்கு சென்னையில் கண்ணதாசன் நகரில் உறவினர்கள் இருக்கிறார்கள். எனது கணவர் காலமாகிவிட்டார். நாங்கள் அதிமுகதான். எங்கள் கணவர் அதிமுகதான். இருந்தாலும் எனக்கு கலைஞரை பிடிக்கும். அவரது கூட்டங்களில் நான் கலந்து கொண்டு அவரது பேச்சை கேட்டிருக்கிறேன். எங்கள் ஊருக்கு கலைஞர் ஆட்சியில் நிறைய திட்டங்கள் வந்திருக்கிறது. கலைஞர் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டதில் இருந்து சென்னை வந்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்று நினைத்திருந்தேன். சொல்லிக்கொண்டே இருந்தேன். இப்போதுதான் வர முடிந்தது. நாங்க அதிமுகவில் இருந்தாலும் கலைஞர் மீது எங்களுக்கு ஒரு மரியாதை, பாசம் இருக்கிறது என்றார்.

kalaignar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe