Advertisment

“பையனையும் அவங்ககிட்ட இழந்துட்டோம்; இப்போ பார்வையும் போச்சு” - இலங்கை கடற்படை தாக்குதலில் பார்வை இழந்த மீனவர்

“We also lost the boy to them; The fisherman who lost his sight in the Sri Lanka Navy attack

ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன் தினம் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் பாக் ஜலசந்தி கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். இரவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைத்தாக்கி விரட்டி அடித்தனர். 3 விசைப்படகுகளைப் பிடித்து வைத்துக்கொண்டு இரவு முழுவதும் மீனவர்களை அடித்துத்துன்புறுத்தியுள்ளனர்.

Advertisment

பல மணி நேரத்திற்குப் பிறகே மீனவர்களை இலங்கை கடற்படையினர் விடுவித்துள்ளனர். காயங்களுடன் தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்.

Advertisment

இந்நிலையில் இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் ஜான்சன் என்ற மீனவர் கண்பார்வையை இழந்துள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அந்த மீனவர் பேசுகையில், “14ம் தேதி கடலுக்குள் சென்றோம். அன்று இரவு 10 மணிவாக்கில் இலங்கை கடற்படையினர் படகைத்தடுத்து நிறுத்தி எங்களை அடித்தனர். என்னுடன் வந்த 8 பேரையும் கம்பு கயிறு போன்ற பொருட்களைக் கொண்டு அடித்தனர். எனக்குக் கூடுதலாக அடி. இருந்த மீன்களையும் அள்ளிக்கொண்டு சென்றுவிட்டனர். வாழ்வாதாரமே போச்சு.

கண்ணில்அடிபட்டுவிட்டது. ஒரு வாரம் பார்க்கலாம் பார்வை வந்துவிட்டால் அறுவை சிகிச்சை செய்து சரி பண்னிடலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். இல்லை எனில் என் வாழ்வாதாரமே போச்சு. ஏற்கனவே ஒரு பையனையும் இலங்கை கடற்படையால் இழந்துவிட்டோம். கண் பார்வை வராது என 90% சொல்லிவிட்டனர். வேறு என்ன செய்வதென்றே எனக்குத்தெரியவில்லை” என்று கூறினார்.

fisherman srilankan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe