நாங்கள் எல்லோரும் ஆசிஃபா தான்! - போராடிய DYFI!

dyfi

ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ராசனா என்ற கிராமத்தில் 8 வயது சிறுமி ஆசிஃபா கடந்த ஜனவரி மாதம் மாயமானார். பின்னர், ஒரு வாரம் கழித்து அங்குள்ள முட்புதர் ஒன்றில் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.

படுகொலை செய்யப்பட்ட ஆசிஃபாவிற்கு நீதி கேட்டும், குற்றவாளிகளுக்கு துணை போனவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கிட வலியுறுத்தியும் இந்திய ஜனநாய வாலிபர் சங்கம் வடசென்னை மாவட்டக்குழு சார்பில் சென்னை தங்க சாலையில் ஆசிஃபாவின் முகமூடி அணிந்து கொண்டு ஞாயிறு அன்று (ஏப் 15) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொருளாளர் தீபா, மாவட்ட தலைவர் சரவணதமிழன்,மாவட்ட துணை செயலாளர் மஞ்சுளா, மாவட்ட செயற்குழு அபிராமி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

படம்: அசோக்குமார்

dyfi
இதையும் படியுங்கள்
Subscribe