Skip to main content

நாங்கள் எல்லோரும் ஆசிஃபா தான்! - போராடிய DYFI!

Published on 15/04/2018 | Edited on 15/04/2018
dyfi

 

ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ராசனா என்ற கிராமத்தில் 8 வயது சிறுமி ஆசிஃபா கடந்த ஜனவரி மாதம் மாயமானார். பின்னர், ஒரு வாரம் கழித்து அங்குள்ள முட்புதர் ஒன்றில் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.

படுகொலை செய்யப்பட்ட ஆசிஃபாவிற்கு நீதி கேட்டும், குற்றவாளிகளுக்கு துணை போனவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கிட வலியுறுத்தியும் இந்திய ஜனநாய வாலிபர் சங்கம் வடசென்னை மாவட்டக்குழு சார்பில் சென்னை தங்க சாலையில் ஆசிஃபாவின் முகமூடி அணிந்து கொண்டு ஞாயிறு அன்று (ஏப் 15) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொருளாளர் தீபா, மாவட்ட தலைவர் சரவணதமிழன்,மாவட்ட துணை செயலாளர்  மஞ்சுளா, மாவட்ட செயற்குழு அபிராமி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

படம்: அசோக்குமார்

சார்ந்த செய்திகள்

Next Story

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல்; சிறுவன் உட்பட 6 பேர் கைது

Published on 17/06/2023 | Edited on 17/06/2023

 

democratic youth federation of india trichy ariyamangalam executive incident

 

திருச்சி மாவட்டம் அரியமங்கலம் அம்மாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ர. முகமது தௌஃபீக் ராஜா (வயது 24). இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அம்மாகுளம் பகுதி கிளை செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு அரியமங்கலம் பகுதியில் நின்றிருந்த போது, திடீரென சுமார் 10 பேர் கொண்ட கும்பல் அரிவாளுடன் அவரைச் சுற்றி வளைத்து கொலை செய்யும் நோக்கில் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் உடல், தலை மற்றும் கைகள் என சுமார் 10 இடங்களில் வெட்டு விழுந்த நிலையில் அலறியபடி ரத்த வெள்ளத்தில் அவர் விழுந்ததும் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது.

 

அதன் பின்னர் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அரியமங்கலம் காவல் ஆய்வாளர் திருவந்தம் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் தௌஃபீக் ராஜா செயல்பட்டு வந்ததால் அதைப் பிடிக்காத மர்ம கும்பல் அவரைக் கொலை செய்யும் நோக்குடன் இந்த கொலைவெறி சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

 

இதையடுத்து அரியமங்கலம் முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த ப. நிஷாந்த் என்கிற பன்னீர்செல்வம் (வயது 23), அம்மாகுளம் பகுதி எல். ஆசைமுத்து (வயது 24), காந்திஜி தெரு ஆ.சந்தோஷ்குமார் (வயது 20), செ.பாலாஜி (வயது 20), உக்கடை திருப்பூர் குமரன் தெருவைச் சேர்ந்த ரா.ரெங்கா என்கிற ரங்கநாதன் (வயது 19) உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் மேலும் 17 வயது சிறுவன் ஒருவரையும் பிடித்து சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். மேலும் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக் கோரி ஜனநாயக வாலிபர் சங்க திருச்சி மாவட்டத் தலைவர் லெனின் தலைமையில் வியாழக்கிழமை நள்ளிரவு திருச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

இளைஞருக்கு அரிவாள் வெட்டு; பாஜக பிரமுகர் தலைமையிலான கும்பல் வெறிச்செயல்

Published on 16/06/2023 | Edited on 16/06/2023

 

trichy ariyamangalam dyfi branch secretary incident bjp executive involved 

 

திருச்சி மாவட்டம் அரியமங்கலம் அம்மாகுளம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கிளைச் செயலாளராக தவ்பிக் (வயது 24) என்பவர் செயல்பட்டு வருகிறார். அதே பகுதியில் வினோத் என்பவரும் வசித்து வருகிறார். பாஜகவை சேர்ந்த இவர் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன. இவர் இருசக்கர வாகனத் திருட்டு மற்றும் போதைப்பொருள் விற்பனையில் சம்பந்தப்பட்டவர் என அந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள். கஞ்சா விற்பனைக்கு எதிராக தவ்பிக் குரல் கொடுத்து வருகிறார். அந்த பகுதியில் போதைப்பொருள் விற்பவர்கள் பற்றி போலீசுக்கும் தகவல் தெரிவித்து வந்தார்.

 

இந்நிலையில் நேற்று இரவு தவ்பிக் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது பாஜக பிரமுகர் வினோத் தலைமையில் வந்த சுமார் 15 பேர் கொண்ட கும்பல் தவ்பிக்கை உடலின் பல்வேறு பகுதிகளில் வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த தவ்பிக்கை பொதுமக்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் லெனின் தலைமையில் வினோத் மற்றும் அவரது கூட்டாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திடீரென திருச்சி அரசு மருத்துவமனை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல்துறையினர் அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து சாலைமறியலை கைவிட்டனர்.

 

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில், “தவ்பிக் போதைப்பொருட்கள் விற்பனைக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தார். அப்பகுதியில் பல்வேறு மக்கள் பணியில் ஈடுபட்டு வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத பாஜகவை சேர்ந்த வினோத் மற்றும் அவருடன் உள்ள சமூக விரோத கும்பலே இத்தகைய கொடூரச் செயலை செய்திருக்கிறார்கள். எனவே காவல்துறை உடனடியாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். மக்கள் சேவையில் ஈடுபட்டு வந்த தவ்பிக்கிற்கு தமிழக அரசு உரிய மேல் சிகிச்சை வழங்கிட வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளனர்.