Advertisment

வழியிலேயே மடக்கி சாம்சங் ஊழியர்கள் கைது

On the way, Samsung employees were arrested

மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள சுங்குவார்சத்திரம் அருகே சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் தொழிற்சங்கம் அமைத்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 9ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

தொடர்ந்து பலமுறை சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றும் சுமுகமான முடிவு இன்னும் எட்டவில்லை. இதனால் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் பந்தல் அகற்றப்பட்டது பரபரப்பு ஏற்படுத்தியது. போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தலைவர் சவுந்தரராஜன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து போலீசாரின் அறிவுறுத்தலை மீறி அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குண்டு கட்டாக செய்து கைது செய்யப்பட்டிருந்தனர்.

Advertisment

அதேநேரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் சார்பாக தொடரப்பட்ட அவசர வழக்கில் போராட்டம் நடத்த தடை இல்லை என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பிறகும் போராட வந்தவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். போராட்டம் நடைபெறும் இடத்திற்கு நான்கு புறத்திலும் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல் போராட்டம் நடத்தப்படும் பந்தல் அருகேவும் போலீசார் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சுங்குவார்சத்திரத்தில் இன்று போராட வந்த சாம்சங் ஊழியர்கள் 30 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

police protest samsung
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe