Advertisment

பேச்சிப்பாறையில் இருந்து தண்ணீர் திறப்பு

குமாி மாவட்டத்தில் பாசனத்திற்காக இன்று பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டது.

Advertisment

குமாி மாவட்டத்தில் விவசாயத்தின் ஜீவ நாடியாக இருந்து வருவது பேச்சிப்பாறை அணையின் தண்ணீா். இந்த அணையில் இருந்து ஆண்டுத்தோறும் ஜீன் 2 அல்லது 3-ம் நாள் விவசாயத்திற்கு தண்ணீா் திறந்து விடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டும் ஓரு மாதம் நெருங்கியும் தண்ணீா் திறந்து விடாததால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்திருந்த பயிா்கள் கருகியது. விளை நிலங்களும் குளங்களும் வறண்டு காணப்பட்டது.

Advertisment

k

பொதுவாக அணைகளில் 1500 மில்லியன் கன அடி தண்ணீா் இருப்பு இருந்தால் பாசனத்திற்கு தண்ணீா் திறந்து விடலாம் என்று விதிமுறை உள்ளது. தற்போது மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாா்-1, சிற்றாா்-2 அணைகளில் தண்ணீா் இருப்பு இருக்கும் நிலையில் தண்ணீா் திறந்து விடாததால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

kk

இதையடுத்து கோதையாறு பாசனத்திற்காக 28-ம் தேதியில் இருந்து அடுத்த மாதம் 28-ம் தேதி வரை நாள் ஓன்றுக்கு விநாடிக்கு 850 கன அடி வீதம் தேவைக்கு ஏற்ப மற்றும் தண்ணீா் இருப்பு மற்றும் நீா் வரத்தை பொறுத்து அணையை திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் இன்று தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமையில் மாவட்ட ஆட்சியா் பிரசாந் வடநேரா பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தாா். இதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்ததுடன் விவசாய நிலத்துக்கும் தண்ணீா் பெருக்கெடுத்தது.

watter
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe