ADVERTISEMENT

தேனியில் கொடிகட்டி பறக்கும் வாட்சப் லாட்டரி! கண்டுகொள்ளாத காவல்துறை!

08:41 AM Aug 17, 2019 | kalaimohan

தமிழகத்தில் லாட்டரி சிட்டுகளின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில் கள்ளத்தனமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வது இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அவ்வப்போது போலீசாரும் நடவடிக்கை எடுத்தாலும் கூட அதிலிருந்து தப்புவதற்காக லாட்டரி விற்பனை முறையை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தற்பொழுது ஒயிட் லாட்டரி, வாட்சப் லாட்டரி போன்றவற்றை உதாரணமாக சொல்லலாம். கேரளா எல்லையில் அமைந்துள்ள தமிழக மாவட்டமான தேனியில் கேரளா லாட்டரி சீட்டுகள் புழக்கம் அதிகம். போலீசார் லாட்டரி சீட்டுகளுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளால் நேரடியாக லாட்டரி சீட்டுகள் விற்பனை இல்லாமல் போயிற்று. லாட்டரி சீட்டில் உள்ள சீரியல் நம்பரை வெள்ளைத்தாளில் எழுதி அதை ஏஜென்ட் கையில் ஒப்படைத்து விடுவார்கள் அந்த எண்களுக்கான லாட்டரி சீட்டுகளை வாங்கி விடுவார். இந்த முறையையும் போலீசார் கண்டுபிடித்து அவ்வப்போது நடவடிக்கை வந்த எடுத்து வந்தனர். தற்போது புதிதாக வாட்ஸ் அப் லாட்டரி தேனியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதுதொடர்பாக லாட்டரி சீட்டு வாங்கும் ஒருநபரிடம் கேட்டபோது.. லாட்டரி சீட்டு விற்றால் அதை போலீசார் கண்டுபிடித்து விடுகிறார்கள் அதனால் நேரடியாக லாட்டரி சீட்டு எங்கள் கைக்கு வராது மாறாக ஏஜென்ட் கைகளில் வந்துள்ள லாட்டரி சீட்டுகளின் சீரியல் நம்பர்களை மட்டும் தொலைபேசியில் சொல்வார். அந்த சீரியல் நம்பர்களில் நாம் தேர்வு செய்ய வேண்டும். அந்த நம்பருக்கு பரிசு கிடைத்தால் அதை நம்மிடம் ஏஜென்ட் கொடுப்பார். இப்போது ஏஜென்ட்களையும் போலீசார் மடக்கிப் பிடித்து விடுகிறார்கள். அதனால் வாட்சப் குழுக்கள் மூலமாக சீரியல் நம்பரை தேர்வு செய்ய சொல்கிறார்கள். அந்த சீட்டுக்கான பணத்தைஆன்லையன் பணப்பரிவர்த்தனை மூலமாக பெற்றுக் கொள்கிறார்கள். பரிசு விழுந்தால் அதற்கான தொகையையும் ஆன்லைனில் நம்முடைய வங்கி கணக்குக்கு வந்து சேர்ந்து விடுகிறது என்று கூறினார்.

தேனியில் மறைமுகமாக பல வாட்சப் லாட்டரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அது எளிமையாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதால் இளைஞர்கள் பலர் வாட்சப் லாட்டரியின் மோகத்தால் பணத்தை இழந்து கொண்டிருக்கிறார்கள். இது சம்பந்தமாக காவல்துறைக்கு புகார்கள் ஏதும் வரவில்லை ஆனால் மறைமுகமாக லாட்டரி விற்பனை தேனியில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உத்தமபாளையத்தில் லாட்டரி விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள. அதோடு வாட்சப் லாட்டரி குறித்து சில போலீஸாருக்கு தெரியும் அப்படி இருந்தும் அந்த வாட்சப் லாட்டரி வியாபாரிகளிடம் பணத்தை வாங்கி கொண்டு கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். அதுபற்றி விசாரணை செய்து வருகிறோம் என்றனர் பெயர் சொல்ல விரும்பாத சில போலீசார். இப்படி துணை முதல்வர் ஒபிஎஸ்சின் சொந்த மாவட்டத்திலேயே போலீசார் ஆசியோடு வாட்சப்லாட்டரி கொடிகட்டி பறந்துகொண்டுதான் இருக்கிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT