தர்பூசணி விவகாரம் ; உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மீது பாய்ந்த நடவடிக்கை

Watermelon issue; Action taken against Food Safety Officer Satish

கோடைக்காலம் நெருங்கி வருவதால் தர்பூசணி பழங்களின் விற்பனை தொடங்கி வருகிறது. கோடைக்காலம் என்றாலே பல இடங்களில் தற்காலிக தர்பூசணி கடைகள் முளைக்கும். இத்தகைய சூழலில் தான் செயற்கையாக ஊசி செலுத்திப் பழுக்க வைக்கப்படும் பழங்கள் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஊசி மூலம் தர்பூசணிபழுக்க வைக்கப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்சோதனை நடத்தி வந்தனர்.

மேலும் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டன. இத்தகைய சூழலில் தான் தர்ப்பூசணி பழத்தில் கலப்படம் செய்யப்படுவதாக வெளியான தகவல் மக்கள் மத்தியிலும் விவசாயிகள் மத்தியிலும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இதன் காரணமாகத் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் விளைவித்த தர்ப்பூசணி பழங்களின் விலை கடும் சரிவைச் சந்தித்தன. இதனால் பல்வேறு பகுதிகள் விவசாயிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகள் ஒன்றாக இணைந்து செய்தியாளர்களை சந்தித்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் செயலால் தர்பூசணி வியாபாரம் அதலபாதாளத்தை அடைந்துள்ளது . ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு அவர் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.

Watermelon issue; Action taken against Food Safety Officer Satish

விவசாயிகளின்குற்றச்சாட்டைதொடர்ந்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் செய்தியாளர்களைசந்தித்துவிளக்கம் அளித்திருந்தார். அதில், 'பழங்களை வெட்டும்போதோ, அதனைக் கையில் தொட்டவுடனோ அடர் சிகப்பு நிறம், மிகவும் தித்திப்புடன், சர்க்கரை பாகு போன்று இருந்தால் அது இயற்கையான பழங்கள் கிடையாது. எல்லா விவசாயிகளும் தர்பூசணியில் ரசாயனம் கலப்பதாகக் கூறவில்லை. தர்பூசணியில் ரசாயனம் கலக்கப்படுவதாக வெளியான வதந்திகளை நம்ப வேண்டாம். எனவே பொதுமக்கள் அச்சமின்றி தர்பூசனை பழங்களைச் சாப்பிடலாம். இது உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது ஆகும்' என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னை மண்டல உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமாரைதமிழ்நாடு மருந்து நிர்வாக துறைக்குபணியிடம் மாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் போஸ் சென்னை மண்டலத்தை கூடுதலாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Tamilnadu transfer watermelon
இதையும் படியுங்கள்
Subscribe