Advertisment

'தண்ணீர் எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது' - உயர்நீதிமன்றம் அதிரடி!

water tanks lorry chennai high court order

தண்ணீர் எடுத்துச் செல்வது தொடர்பாக, தென்சென்னை தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

Advertisment

இந்த வழக்கு, இன்று (10/04/2021) விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சாகுபடிக்குப் பயன்படுத்தப்படாத விவசாயக் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்துச் செல்லும் போது, அதிகாரிகள் மடக்கிப் பிடிக்கின்றனர் என்று வாதிட்டார். அதைத் தொடர்ந்து, தமிழக அரசின் வழக்கறிஞர், தண்ணீர் எடுக்கவும், கொண்டுசெல்லவும் உரிய ஒப்புதல்களைப் பெற்ற லாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லை என வாதிட்டார்.

Advertisment

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உரிய ஒப்புதலைப் பெற்ற உரிமையாளர், அதற்கான ஆதாரங்களுடன் நீர் எடுத்துச் செல்ல அனுமதி கோரி அதிகாரிகளுக்கு விண்ணப்பிக்கலாம். உரிய ஒப்புதல்களைப் பெறாத தண்ணீர் லாரிகள் தண்ணீர் எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது என்று கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

chennai high court lorry water tank
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe