தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்திருக்கும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது.
இந்நிலையில், தொடர் மழை காரணமாக சென்னையை ஒட்டியுள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்துத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மொத்தம் 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில், தற்பொழுது நீரிருப்பு 21.9 அடி ஆக இருக்கிறது. நீர்வரத்துத் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அப்பகுதியில் உள்ள மக்கள், நீர்வரத்தைக் காண்பதற்காக அப்பகுதியில் குவிந்துள்ளதோடு, அபாயகரமாக நின்று செல்ஃபி புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர். செம்பரம்பாக்கம் ஏரியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தற்போது நேரில் ஆய்வு கொண்டு வருகின்றனர். கனமழை காரணமாகப் பூண்டி ஏரியில் இருந்து நீர் வரத்து என்பது நிறுத்தப்பட்டுள்ளது.