style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
கடந்த ஒருவாரமாகதொடர்ந்து பெய்துவந்த கனமழை காரணமாககர்நாடக காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து அதிகமாகிஅணைகளில் நீர் திறக்கப்பட்டது. அதன் காரணமாக மேட்டூர் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்திருந்தது இந்நிலையில் தற்போதுமழை பொழிவு குறைந்ததால்அணைகளில் நீர்திறப்பு விநாடிக்கு 37,000 கனஅடியில் இருந்து 20,000 கனஅடியாக குறைக்கப்பட்டிருந்தது.
கபினியில் இருந்து விநாடிக்கு 20,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.கேஆர்எஸ் அணையில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டிருந்தது இந்நிலையில் நீர்வரத்து மேலும் குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது.
தற்போது மேட்டூர் அணைக்குநீர்வரத்து40,000 கனஅடியில் இருந்து 16,000 கனஅடியாக குறைந்து தற்போது மேட்டூர் அணையின்நீர்மட்டம்-120.19 அடியாகவும் நீர் இருப்பு-93.77 டிஎம்சியாகஉள்ளது. அதேபோல் மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு கால்வாய் பாசனத்திற்கு 800 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.