சேலம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியிலிருந்து 13 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 117.220 அடியாக உள்ள நிலையில், தற்போதைய நீர் இருப்பு 89.105 டிஎம்சி ஆக உள்ளது.

Advertisment

 Water supply to Mettur Dam increased

அதேபோல் அணையில் இருந்து வினாடிக்கு 10,800 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில்வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் விரைவில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.