Advertisment

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

th

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Advertisment

கர்நாடகா மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளதால் அங்குள்ள கபினி, கேஆர்எஸ் அணைகள் மீண்டும் நிரம்பியுள்ளன. இதனால் பாதுகாப்பு கருதி, அவ்விரு அணைகளில் இருந்தும் உபரி நீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

Advertisment

வினாடிக்கு 1.25 லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரானது இன்று நள்ளிரவுக்குள் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியிருந்தது. டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் நான்கு அடி தண்ணீர் மட்டும் குறைந்தது. இப்போது கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் மேட்டூர் அணைய வந்தடையும் பட்சத்தில் இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை எட்டும் வாய்ப்பு உள்ளது.

me

இதனால் கர்நாடகாவில் இருந்து வரும் உபரிநீர் மேட்டூர் அணையில் இருந்து 16 கண் பாலம் வழியாகவும், பிரதான மதகுகள் வழியாகவும் திறந்து விடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. உபரிநீர் வெளியேற்றத்தால் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதையடுத்து காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கு விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி கூறுகையில், ''காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சேலம் மற்றும் அதைச்சுற்றியுள்ள மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆர்வம் மிகுதியால் காவிரி ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ, செல்ஃபி புகைப்படம் எடுக்கவோ கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீர் படிப்படியாக அதிகரிக்கப்படுவதால் அசம்பாவித சம்பவங்களை தடுக்க ஆங்காங்கே தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது,'' என்றார்.

மேட்டூர் அணை நிலவரம்: இன்று (ஆகஸ்ட் 10, 2018) மாலை 4 மணி நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 117.32 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 61932 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் தேவை என்ற நிலையில், மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 36424 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

Mettur Dam
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe