Advertisment

கோவையில் தண்ணீர் தனியார்மயம்!! குடிநீர் குழாய்க்கு அஞ்சலி போராட்டம்!!

குடிநீர் இணைப்பு வசதிகளை செய்யவுள்ள தனியார் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி குடிநீர் குழாய்க்கு அஞ்சலி செலுத்திய மாதர் சங்கத்தினர் கோவையில் கைது செய்யப்பட்டனர்.

Advertisment

kovai

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

கோவை மாநகரத்திற்கான குடிநீர் விநியோகத்தை 26 ஆண்டுகளுக்கு சூயஸ் என்கிற பன்னாட்டு நிறுவனம் கோவை மாநகராட்சியிடம் ஒப்பந்தத்தை போட்டுள்ளது. இதன்காரணமாக பொது குழாய்கள் அகற்றப்படும், குடிநீர் வணிகமயமக்கப்படும் என்ற குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து , கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள பொது குடிநீர் குழாய்க்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட மாதர் சங்கத்தினர்ஊர்வலமாக சென்று மாலை அணிவித்தும், தேங்காய் பழம் வைத்து பூஜை செய்தும் அஞ்சலி செலுத்தினர். மேலும் குடிநீர் குழாயை சுற்றி ஓப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்க அகில இந்திய துணை தலைவர் உ.வாசுகி, உள்ளிட்ட 38 பேர் கைது செய்யப்பட்டனர்.

kovai water
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe