Water opening in 16 sluices of Mettur Dam

Advertisment

கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதன் காரணமாக அண்மையில் மேட்டூர் அணையானதுதனது முழு கொள்ளளவை எட்டியிருந்தது. அதனைத்தொடர்ந்தும் நீர்வரத்து அதிகரித்து இருந்ததால் அணையின் 16 கண் மதகுகள் வழியாக நீர் திறக்கப்பட்டது. கடந்த 19 நாட்களாக மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது உபரி நீர் திறப்பு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து 20 ஆயிரம் கன அடியாக சரிந்ததால் 16 கண் மதகுகளில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.