
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105 அடியை தாண்டியுள்ளது.
கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக காவிரியில் நீர்வரத்து என்பதுஅதிகரித்திருந்தது. கர்நாடகாவின் கபினி, கே.எஸ்.ஆர் அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படிமேட்டூர் அணையின் நீர்மட்டம்105.81 அடியாக உயர்ந்த நிலையில், நீர் இருப்பு 75.57 டி.எம்.சியாக இருக்கிறது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 95,138 கன அடியிலிருந்து 98,208 கன அடியாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 5 அடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.
Follow Us