
ஈரோட்டில் மது போதையில் காவலாளி ஒருவர் கையை அறுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டம், சிவகிரி, தாண்டாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (52). அப்பகுதியில் உள்ள ஸ்பின்னிங் மில் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி விஜயா (42). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். வேல்முருகனுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. இந்த நிலையில், நேற்று முன் தினம் மனைவி விஜயாவும்மகனும் கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது வேல்முருகன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
மதுபோதையில் கைகள் இரண்டையும் பிளேடால் அறுத்துக் கொண்டது தெரியவந்தது. மதுபோதையில் வேல்முருகன் இதுபோல அடிக்கடி ஏதாவது செய்து கொள்வது வழக்கமாம். இதையடுத்துஉடனடியாக அவரை மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே வேல்முருகன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்துசிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Follow Us