/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_626.jpg)
வண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான 22 பேர், போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த சிறுமியின் உறுவினர் ஷகிதா பானு, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், எண்ணூர் காவல் ஆய்வாளர் புகழேந்தி, ரயில்வே ஊழியர் காமேஷ்வரன் உள்ளிட்ட 26 பேர் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்த வண்ணாரப்பேட்டை காவல்துறையினர், 22 பேரை கடந்த ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் கைதான 22 பேரும், போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது ஃபரூக் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கின் குற்றப்பத்திரிகை நகல்களைக், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக, வழக்கின் விசாரணையை நீதிபதி, பிப்ரவரி 24ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)