‘போக்குவரத்து ஆய்வாளர் பலியான சம்பவம் திட்டமிட்ட கொலையா?’ - தீவிர விசாரணையில் போலீசார்!

fsf

கரூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளரான கனகராஜ் நேற்று (22.11.2021) காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அந்த வழியாக வந்த வேன் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயற்சித்துள்ளார். அப்போது அந்த வேன் நிற்காமல் ஆய்வாளர் கனகராஜ் மீது மோதிவிட்டு வேகமாகச் சென்றது. உயிருக்குப் போராடிய நிலையில் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது விபத்தா? அல்லது திட்டமிட்ட கொலையா? என்பது குறித்து காவலர்கள் வழக்குப் பதிவுசெய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும், ஆய்வாளர் மீது மோதிவிட்டுச் சென்ற வேனை சிசிடிவி கேமரா உதவியோடு பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாமகஇளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்ந்து அதிகாரிகள் மீது நடத்தப்படும் இந்த தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்றும் குற்றவாளிகளை உடனே பிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

karur passed away police
இதையும் படியுங்கள்
Subscribe