அரசின் எச்சரிக்கை; அதிர்ச்சியில் போக்குவரத்து ஊழியர்கள்!

tn

போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது, அப்படி போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என போக்குவரத்து ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மார்ச் 28,29 ஆகிய தேதிகளில் சில பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டத்தினை அறிவித்திருந்தன. இந்த நாடு தழுவிய போராட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள், தொழிற்சங்கங்கள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது இந்நிலையில் தொழிற்சங்கங்களால் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நாளில் போக்குவரத்து ஊழியர்களுக்கு எந்தவித விடுப்பும் அளிக்கக்கூடாது. அந்த தேதியில் ஏற்கனவே விடுப்பு கேட்டிருந்தால் அதனை ரத்து செய்ய வேண்டும்,வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு பேருந்துகள் இயக்கப்படாத சூழல் ஏற்பட்டால் பயணிகளுக்குச் சிரமம் ஏற்படும் எனவே வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள அந்த நாட்களில் ஊழியர்கள் தவறாமல் பணிக்கு வரவேண்டும்.

போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது, அப்படி போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். மீறி போராட்டத்தில் கலந்துகொண்டால் துறை ரீதியிலான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என எச்சரித்து மதுரை மாவட்ட போக்குவரத்துக் கழகம் சுற்றறிக்கை வாயிலாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

madurai Transport
இதையும் படியுங்கள்
Subscribe