Advertisment

தகாத உறவு ஆசாமிகளுக்கு மிரட்டல்; ஒவ்வொரு வீட்டு வாசலுக்கும் வந்த எச்சரிக்கை கடிதம்

A warning letter arrived at every door; police investigation

சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் இரும்பாலை அருகே, புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளின் வாசலில் செப். 30ம் தேதி அதிகாலையில் மர்ம கடிதம் ஒன்று நகலெடுத்து வீசப்பட்டுக் கிடந்தது தெரிய வந்தது.

Advertisment

வழக்கம்போல் காலையில் எழுந்து வெளியே வந்த வீட்டு உரிமையாளர்கள் அந்தக் கடிதத்தை எடுத்துப் படித்துப் பார்த்தனர். அதில், ''குடும்பத்தாருக்கு துரோகம் செய்துவிட்டு முறையற்ற தொடர்பில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை. துரோகம் செய்யும் கணவன், மனைவிக்கு தக்க தண்டனை கிடைக்கும். அந்த தண்டனை கொடூரமாக இருக்கும். இதில் இருந்து யாரும் தப்பிக்கவே முடியாது,'' என்று எழுதப்பட்டு இருந்தது.

Advertisment

இந்தக் கடித விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். வீட்டு வாசல்களில் கடிதங்களை பிரதி எடுத்து வீசிச்சென்ற மர்ம நபர் யார்? என்று தீவிர விசாரணை நடந்து வருகிறது.

illegally letter police Salem
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe