Advertisment

எறி பந்து போட்டியில் வென்ற தமிழ்நாடு அணிக்கு உற்சாக வரவேற்பு

A warm welcome for the Tamil Nadu team who won the handball tournament

இந்திய - நேபாள நாடுகளுக்கு இடையேயான எறி பந்து போட்டிகள் கடந்த 13 ஆம்தேதி முதல் 17 ஆம் தேதி வரை நேபாள நாட்டில் நடைபெற்றது. இந்தியாவிலிருந்து 7 அணிகளும் நேபாள நாட்டைச் சேர்ந்த 5 அணிகளும்பங்கேற்றன. இந்த போட்டியில் தமிழ்நாடு அணி முதல் இடம் பிடித்துச் சாதனை படைத்தது.

Advertisment

வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றி சொந்த ஊர் திரும்பிய வீரர்களுக்கு இன்று ஈரோடு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேள தாளங்கள் முழங்க வரவேற்ற வீரர்களின் பெற்றோர்கள், கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தஞ்சாவூர் மற்றும் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற பின்னர் நேபாள நாட்டில் நடைபெற்ற இரு நாடுகளுக்கு இடையேயான போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக வீராங்கனைகள் தெரிவித்தனர்.

Advertisment

sports Erode
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe