warden apologized for making indecent comments about women's clothing

திருச்சி என்.ஐ.டி மாணவிகள் விடுதியில் மாணவர்களின் வசதிக்காக ஒவ்வொரு அறையிலும் இணையதள சேவை அளிப்பதற்காக நேற்று காலை ஒப்பந்த ஊழியர்கள் 5 பேர் சென்றுள்ளனர். அப்போது ஒரு அறையில் மாணவி தனியாக இருக்கும் போது இணையதள சேவை அளிப்பதற்காக வந்த ஊழியர் ஒருவர் அந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். சுதாரித்துக்கொண்ட மாணவி வெளியே ஓடிவந்து சத்தம்போட்டுள்ளார்.

Advertisment

பின்னர் அங்கிருந்த மற்ற மாணவிகள் பிடித்து திருவெறும்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டு நேற்று இரவே திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Advertisment

இந்த நிலையில் அலட்சியமாக நடந்துகொண்ட கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து என்.ஐ.டி வளாகத்தில் இரவும் முதல் மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தி வந்தனர். 5 ஆண் ஊழியர்கள் மாணவர்களின் அறைக்கு இணையதள சேவை அளிக்க வரும் போது விடுதி காப்பாளர்கள் உடன் இருந்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல், மாணவிகளின் அறைக்குத் தனியாக ஆண் ஊழியர்களை அனுப்பி வைத்திருக்கின்றனர். அதன் காரணமாகவே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அதனால், விடுதி காப்பாளர்கள் மூன்று பேரும் சம்பந்தப்பட்ட மாணவியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி என்.ஐ.டி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

மேலும், அத்துமீறலில் ஈடுபட்ட நபரை மரியாதையாகவும், பாதிக்கப்பட்ட மாணவியைத் தரக்குறைவாகவும் கல்லூரி நிர்வாகம் நடத்தியதாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் ஆதங்கம் தெரிவித்தனர். அதிலும் குறிப்பாக, விடுதி காப்பாளர் பெண்கள் அரைகுறை ஆடை அணிந்தால் அப்படிதான் நடக்கும் என்று பெண்கள் மீதே குறை கூறியிருக்கிறார். போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த திருச்சி மாவட்ட எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகள் என்.ஐ.டிக்கு நேரில் சென்று விசாரித்தனர்.

Advertisment

இந்த நிலையில் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் அநாகரீகமாகப் பேசிய விடுதி காப்பாளர் பேபி மன்னிப்பு கேட்டார். அதன்பின்பு மாணவர்களின் போராட்டம் வாபஸ் பெற்று கலைந்து சென்றனர்.