Advertisment

ராஜினாமா செய்த வார்டு உறுப்பினர்கள்... ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

Ward members who resigned ... agitation in the Collector's office

Advertisment

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தீராம் பாளையத்தில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளன. அதில் தீராம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் சாவித்திரி மற்றும் அவருடைய கணவர் ஆகிய இருவரும் ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத்தகாத வார்த்தைகளால் பேசுவதோடு இதுவரை எந்த கூட்டத்திற்கும் இந்த நடவடிக்கைகளும் குறித்து முறையாகப் பதிவு செய்து கையெழுத்து பெறப்பட வில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் 9-வார்டு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து கணக்கு வழக்கு எதுவும் இதுவரை காட்டப்படவில்லை. மேலும் தொடர்ந்து அவர் அராஜகமான செயலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி வார்டு உறுப்பினர்களான ரங்கம்மாள், நித்தியா, சவுந்தர்யா, தங்கையன், ரெங்கபாசன் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாகத்திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து கடிதம் கொடுத்தனர். இதனால் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

resign trichy ward members
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe