Wanted criminal arrested at Trichy airport

Advertisment

திருச்சி விமான நிலையத்தில் கேரள மாநிலம் கண்ணணூரைச் சேர்ந்த காவல் துறையினரால் தேடப்படும் குற்றவாளி குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இதனால், திருச்சி விமானநிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கேரள மாநிலம் கண்ணனூர் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த ஹீதாஸ் (27) என்பவர் இன்று காலை சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் பயணம் செய்து வந்தார். விமான நிலைய குடியேற்ற பிரிவு அதிகாரிகள் அவரின் பாஸ்போர்ட்டை தணிக்கை செய்த போது, அவர் மீது கேரள மாநிலம் கண்ணனூரில் வழக்கு பதியப்பட்டு லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டு தேடப்படும் குற்றவாளி என தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேற்கொண்டு காவல்துறையினர் அவரை விசாரித்து கண்ணனூர் காவல் துறையினரிடம்‌ ஒப்படைத்தனர்.